வடக்கு, கிழக்கு உதைபந்தாட்ட வரலாற்றில் புதிய அத்தியாயம்! நீங்களும் பார்க்கலாம்

Report Print Dias Dias in ஏனைய விளையாட்டுக்கள்

வடக்கு, கிழக்கு தமிழர் தாயக உதைபந்தாட்ட வரலாற்றில் மற்றுமொரு அத்தியாயமாக ஐ.பி.சி தமிழ் மற்றும் லங்காசிறி என்பவற்றின் ஊடக அனுசரணையில் வடக்கு, கிழக்கின் முதலாவது உதைபந்தாட்ட திருவிழா இடம்பெறவுள்ளது.

வடக்கு, கிழக்கு பிறிமியா் லீக் (north east premier league) எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள இந்த உதைபந்தாட்ட போட்டி எதிர்வரும் 30ஆம் திகதி யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பட்ரி சுப்பர் கிங்கஸ் அணி, திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவபடுத்தும் வகையில் ரிங்கோ ரைய்ரன்ஸ் அணி, கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவபடுத்தும் வகையில் கிளியூர் கிங்ஸ் அணி ஆகியவை பங்கேற்கின்றன.

தொடர்ந்தும் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவபடுத்தும் வகையில் அம்பாறை அவென்ஜேர்ஸ் அணி, மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவபடுத்தும் வகையில் மன்னார் ஏப்.சி மற்றும் மாதோட்டம் ஏப்.சி அணிகள், முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவபடுத்தும் வகையில் முல்லை பீனிக்ஸ் அணி, வவுனியா மாவட்டத்தை பிரதிநிதித்துவபடுத்தும் வகையில் வவுனியா வொரியஸ், ரில்கோ கொன்கியூரஸ் அணி என்பன பங்குபற்றுகின்றன.

அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தை பிரதிநிதித்துவபடுத்தும் வகையில் வல்லை ஏப்.சி, நோதர்ன் எலைய்ட் ஏப்.சி, தமிழ் யுனைட்டட் அணிகள் பங்குபற்றுவதுடன், வெற்றி பெறும் அணிகளுக்கு பெறுமதியான பணப்பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.

முதலாம் பரிசாக 50 இலட்சம் ரூபாவும், இரண்டாம் பரிசாக 30 இலட்சம் ரூபாவும், மூன்றாம் பரிசாக 15 இலட்சம் ரூபாவும், நான்காம் பரிசாக 5 இலட்சம் ரூபாவும் வழங்கப்படவுள்ளன.

இந்த பிறிமியர் லீக் உதைபந்தாட்ட போட்டியானது வடக்கு, கிழக்கு தமிழர் தாயக பகுதியில் உள்ள உதைபந்தாட்ட அணிகளுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாக அமைகின்றது.

அத்துடன் உதைப்பந்தாட்ட போட்டியின் வெற்றிக்கிண்ணம் மாவட்டங்கள் தோறும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அண்மையில் மட்டக்களப்பிற்கும் வெற்றிக்கிண்ணம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதன்போது அதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

01.யாழில் பிரமாண்டமானமுறையில் இடம்பெறும் உதைப்பந்தாட்ட போட்டி: லங்காசிறி, ஐ.பி.சி அணிகள் அபாரம்

02. தமிழர் தாயக உதைபந்தாட்ட வரலாற்றில் மற்றுமொரு பரிமாணம்.. இன்னும் 3 நாட்கள் மாத்திரமே