சிறப்பாக இடம்பெற்ற மன்னார் பிரதேச விளையாட்டு விழா

Report Print Ashik in ஏனைய விளையாட்டுக்கள்

தேசிய இளைஞர் சேவை மன்றம் வருடா வருடம் நடத்தும் தேசிய மட்ட விளையாட்டு விழாவிற்கான இளைஞர் யுவதிகளை தெரிவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் முதற்கட்டமாக பிரதேச ரீதியில் உள்ள வீரர் மற்றும் வீராங்கனைகளை தெரிவு செய்யும் 30ஆவது பிரதேச விளையாட்டு விழா நேற்று காலை மன்னார் பொது மைதானத்தில் ஆரம்பமானது.

மன்னார் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி சைமன் சில்வா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மன்னார் நகர சபையின் உபதலைவர் செபஸ்ரியான, மன்னார் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மன்னார் பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட 100 இற்கும் மேற்பட்ட இளைஞர் மற்றும் யுவதிகள் இதில் கலந்து கொண்டு வெற்றி கிண்ணங்களையும், சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டனர்.

அத்துடன் பிரதேச விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற அனைத்து வீரர் மற்றும் வீராங்கனைகளும் எதிர்வரும் யூலை மாதம் நடைபெறவுள்ள மாவட்ட மட்ட விளையாட்டு விழாவில் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.