மறைந்திருக்கும் வீரர்களை வெளிக்கொண்டு வருவோம்: பிரதி அமைச்சர் காதர் மஸ்தான்

Report Print Ashik in ஏனைய விளையாட்டுக்கள்

முசலி மண்ணில் திறமையுள்ள வீரர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்களது திறமைகள் தேசிய, சர்வதேச ரீதியில் கீர்த்தியும் பெருமையும் பறை சாற்றப்படல் வேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான காதர் மஸ்தான் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் வேப்பங்குளம் முஹம்மதியா விளையாட்டுக் கழகம் நடத்திய கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிச் சுற்று இன்று வேப்பங்குளம் கரப்பந்தாட்ட திடலில் கோலாகலமாக இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் குறிப்பிடுகையில்,

விளையாட்டுக்கள் மூலம் மனிதன் திடமானவனாக மாறுகிறான். அவனது உடலும் உள்ளமும் உறுதியடைகின்றன. கரப்பந்து இலங்கையின் தேசிய விளையாட்டாகும்.

இந்த விளையாட்டு இப் பகுதிகளில் பிரபல்யமானதாக இருக்கின்றது.

மேலும் அரசியலில் அடிமைகளாக இருக்காமல் எமது சொந்தக் கால்களில் நிற்கவும் எமது உரிமைகளை வென்றெடுக்கவும் நாம் நிதானமாக சிந்திக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இறுதிச் சுற்றில் வேப்பங்குளம் முஹம்மதியா விளையாட்டுக் கழகத்தை எதிர்கொண்டாடிய முசலி ஹிறா விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றுள்ளது.

Latest Offers

loading...