ரக்பி போட்டியில் தோற்ற யோஷித்த ராஜபக்ச தலைமையிலான அணி - ஷிரந்தியும் மைதானத்தில்

Report Print Steephen Steephen in ஏனைய விளையாட்டுக்கள்

நாடு அரசியல் ரீதியான பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச தனது இரண்டு புதல்வர்கள் விளையாடும் ரக்பி போட்டியை காண நேற்று மைதானத்திற்கு சென்றிருந்திருந்தார்.

முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பிரதமருமான மகிந்த ராஜபக்ச போட்டியை காண வந்திருக்கவில்லை. ராஜபக்ச தம்பதியின் புதல்வர்களான யோஷித்த மற்றும் ரோஹித்த ஆகியோர் சீ.எச். ரக்பி அணியில் விளையாடி வருகின்றனர்.

யோஷித்த ராஜபக்ச அணியின் தலைவர். நாமல் ராஜபக்ச அணியின் பயிற்சியாளர் இல்லை என்ற போதிலும் அணியினருக்கு பயிற்சியளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

நேற்று நடைபெற்ற இந்த றக்பி போட்டியில் சீ.ஆர். அணி சீ.எச் அணியை 24 - 23 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோற்கடித்தது.

Latest Offers