உலக தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் மட்டக்களப்பு பாடசாலை மாணவர்களுக்கான இறகுப் பந்தாட்டம்

Report Print Dias Dias in ஏனைய விளையாட்டுக்கள்

உலக தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் பேராதரவுடனும் உலக தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் பிரான்ஸ் நாட்டு கிளையின் பூரண அனுசரணையுடனும் மட்டக்களப்பு மாவட்டத்தின் பாடசாலை மாணவர்களுக்கான, திறந்த மற்றும் 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான பூப்பந்தாட்ட சுற்று போட்டியானது கடந்த சனிக்கிழமை (26/10/2019) ஆரம்பிக்கப்பட்டது.

இச்சுற்று போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 12 பாடசாலையில் இருந்து 85க்கு மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டுள்ளனர். இதில் பாடசாலை மாணவர்கள் இன , மத,சமய பேதமின்றி கலந்து கொண்டது வரவேற்க தக்கது. இச்சுற்று போட்டியானது ஐப்பசி மாதம் 26,27ம் திகதிகளிலும் கார்த்திகை மாதம் 1,2,3ம் திகதிகளிலும் நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்விற்கான பிரதம விருந்தினராக மட்டக்களப்பு கல்வி வலய உதவிக்கல்வி பணிப்பாளர் (உடற்கல்வி) எஸ்.லவக்குமார் சிறப்பு விருந்தினராக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர் ந.திருவருட்செல்வன் கலந்து கொண்டதுடன் கௌரவ விருந்தினர்களாக மட்டக்களப்பு பூப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் எஸ்.ராஜேந்திரா மற்றும் கிழக்கு மாகாண பூப்பந்தாட்ட சங்கத்தின் உபதலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சங்கத்தின் செயலாளருமான ஆ.முத்துலிங்கம் மற்றும் உலக தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும், உடற்கல்வி சேவைக்கால பயிற்சி ஆலோசகருமான.இரவீந்திரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

சனிக்கிழமை காலை 8 மணியளவில் விருந்தினர் வருகை இடம்பெற்று 9 மணியளவில் போட்டிகள் மட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சங்கத்தின் உள்ளக அரங்கில் (கள்ளியங்காடு) ஆரம்பமாகியது. அனைத்து போட்டிகளும் விலகல் முறையில் இடம்பெற்றன. அன்றயதினம் 14 வயதிற்கு கீழ் ,ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆட்டம், 16 வயதிற்கு கீழ், ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆட்டம் ,19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆட்டம் இவ்வனைத்து பிரிவுகளும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டியாக இடம் பெற்றது. அன்றைய நாளில் அனைத்து பிரிவுகளிலும் காலிறுதி போட்டி வரை மொத்தமாக 81 போட்டிகள் இடம்பெற்றன. காலை 9 மணிக்கு தொடங்கிய போட்டிகள் இரவு 7.30 வரை நடைபெற்றன. காலையில் தமது பிள்ளைகளுடன் வருகை தந்த பெற்றோர் மலை வரை உடனிருந்து தம் பிள்ளைகளையும் பிற போட்டியாளர்களை உற்சாகமூட்டியது எதிர்பாராத ஒன்றாக அமைந்திருந்தது.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் போட்டிகள் தொடங்குவதில் பெரும் சிக்கலேற்பட்டது. எனினும் போட்டி ஒழுங்கமைப்பாளர்களின் விரைவான சமயோசித தீர்மானங்களினால் அநேகமான போட்டிகள் உடனடியாக வெபர் உள்ளக அரங்கிற்கு மாற்ற பட்டு அனைத்து அரையிறுதி போட்டிகள் மற்றும் சில இறுதி போட்டிகளும் முன்னர் தீர்மானித்தது போன்று நடாத்தி முடிக்கப்பட் டு, இந்த வாரம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான திறந்த ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆட்டம், ஆண்களுக்கான 40 வயதிற்கு மேற்பட்ட ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆட்டம் இடம் பெற்றது.

இவ்வாறானதொரு சுற்று தொடரானது மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறுவது இதுவே முதல் தடவையாகும். இந்நிகழ்வானது இனிதே நிறைவுற தங்களது ஒத்துழைப்பு அத்தியாவசியமானது என்பதனை தெரிவித்து கொண்டு இச்சுற்று தொடரானது ஒவ்வொரு வருடமும் நடைபெற வேண்டும் என்றும் அடுத்த வருடம் இதை விட சிறப்பாக நடத்துவோம் என்ற உறுதியையும் போட்டி ஏற்பாட்டு குழு வழங்கியுள்ளது.

கடந்த வார சுற்று போட்டிகளின் தொடர்ச்சியாக இந்த வார இறுதியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான திறந்த, ஆண்களுக்கான 40 வயதிற்கு மேற்பட்ட ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆட்டங்கள் இடம்பெற்றன. இப்போட்டிகளிலும் அதிகளவானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டதை காணக்கூடியதாகவிருந்தது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இறுதிப்போட்டிகள் ஆரம்பமாகின. அனைத்து இறுதிப்போட்டிகளும் விறுவிறுப்பான வகையில் இடம்பெற்றது பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் இருந்தது.

இறுதி நிகழ்வின் பிரதம விருந்தினராக வினோபா இந்திரன் (பிரபல சட்டத்தரணி மற்றும் பதில் நீதிபதி, மட்டக்களப்பு) கலந்து கொண்டதுடன் சிறப்பு விருந்தினர்களாக ஈஸ்பரன் (மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்), கமலன் (உலக தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் இலங்கை கிளை தலைவர்) மற்றும் திருவருட்செல்வன் (வீதி அபிவிருத்தி அதிகார சபை, சிரேஷ்ட பொறியியலாளர்) ஆகியோரும் அத்துடன் கௌரவ விருந்தினர்களாக மட்டக்களப்பு பூப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் எஸ்.ராஜேந்திரா மற்றும் கிழக்கு மாகாண பூப்பந்தாட்ட சங்கத்தின் உபதலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சங்கத்தின் செயலாளருமான ஆ.முத்துலிங்கம் அவர்களும் மற்றும் உலக தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும், உடற்கல்வி சேவைக்கால பயிற்சி ஆலோசகருமான இரவீந்திரன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இறுதி நிகழ்வில் உரையாற்றிய பிரதம மற்றும் சிறப்பு விருந்தினர்கள் உலக தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் இம்முயற்சியினை வெகுவாக பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பங்கு பற்றிய அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் வீர வீராங்கனைகளுக்கு சான்றிதழ்களும் வெற்றி கேடயங்களும் பரிசில்களாக விருந்தினர்களால் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகள் யாவும் மாலை 6.30 அளவில் இனிதே நிறைவு பெற்றன.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் விபரம் பின்வருமாறு,

14 வயதிற்கு கீழ்ப்பட்டவர்கள்- ஆண்கள்

ஒற்றையர் முதலிடம்: K. ஆக்க்ஷே (Aakshe)

இரண்டாமிடம்: அக்சயன்

இரட்டையர் முதலிடம் : ஆக்க்ஷே & நேகம் டில்ஷான்

இரண்டாமிடம் : செல்வன் T .தமாலாக்ஷன் & P. ஆருஷன்

14 வயதிற்கு கீழ்ப்பட்டவர்கள்- பெண்கள்

ஒற்றையர் முதலிடம்: நர்த்தகி

இரண்டாமிடம்: D .கிஷோரிகா

இரட்டையர் முதலிடம்: D .கிஷோரிகா & D .தனுரிகா

இரண்டாமிடம்: நர்த்தகி & டிலக்சனா

16 வயதிற்கு கீழ்ப்பட்டவர்கள் - ஆண்கள்

ஒற்றையர் முதலிடம்: A .M .M .முனாசிஹ்

இரண்டாமிடம்: S .H .ஜோசப்

இரட்டையர் முதலிடம்: அப்துர் ரஹ்மான் & M .F .M .பாஸ்னி

இரண்டாமிடம்: J .I செல்லர் & P. அபிஷரோன்

16 வயதிற்கு கீழ்ப்பட்டவர்கள்- பெண்கள்

ஒற்றையர் முதலிடம்: J. அர்ச்சனா

இரண்டாமிடம்: S. சேஷாங்கி

இரட்டையர் முதலிடம்: S. தர்ஷா & R .சமுத்திரா

இரண்டாமிடம்: J. பிரணீதா & K. ஹர்ஜனா

19 வயதிற்கு கீழ்ப்பட்டவர்கள்- ஆண்கள்

ஒற்றையர் முதலிடம்: M R.M .பராஜ்

இரண்டாமிடம்: A .F .S.அஹமத்

இரட்டையர் முதலிடம்: M.S.M மஸார் & M.M.M.முக்ரிம்

இரண்டாமிடம்: A.F.S.அஹமத் & M.I.M.புஷ்ரி

திறந்த போட்டி - ஆண்கள்

ஒற்றையர் முதலிடம்: .K .சற்குணசீலன்

இரண்டாமிடம்: T .குஹேந்திரா

இரட்டையர் முதலிடம்: .K .சற்குணசீலன் & L .கிஷோக்

இரண்டாமிடம்: T .குஹேந்திரா & B .திசாந்தன்

திறந்த போட்டி-பெண்கள்

ஒற்றையர் முதலிடம்: டிபாஜினி

இரண்டாமிடம்: T .அபிநயா

இரட்டையர் முதலிடம்: T .அபிநயா & டெபோரா

இரண்டாமிடம்: பவானுஜா & விருக்ஷிகா

40 வயதிற்கு அதிகமானவர்கள் - ஆண்கள்

ஒற்றையர் முதலிடம்: K .சத்யசீலன்

இரண்டாமிடம்: S .ஸ்ரீமுருகன்

இரட்டையர் முதலிடம்: S .ஸ்ரீமுருகன் & சத்யசேகர்

இரண்டாமிடம்: T .குமாரராஜா & நந்தகுமார்