வட மாகாண பளு­தூக்­கலில் இரண்டு பதக்கங்­களை சுவீகரித்த இள­வாலை கன்­னி­யர் மடம்!

Report Print Samaran Samaran in ஏனைய விளையாட்டுக்கள்
வட மாகாண பளு­தூக்­கலில் இரண்டு பதக்கங்­களை சுவீகரித்த இள­வாலை கன்­னி­யர் மடம்!

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான பளு­தூக்­கல் தொட­ரில் இள­வாலை கன்­னி­யர் மடத்­துக்கு ஒரு தங்­கம், ஒரு வெண்­க­லம் என்று இரண்டு பதக்­கங்­கள் கிடைத்­தன.

குரு­ந­கர் சென். ஜேம்ஸ் ஆண்­கள் பாட­சா­லை­யில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற இந்­தப் போட்­டி­யில் இள­வாலை கன்­னி­யர் மடத்­தைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த டிலுசா 90 கிலோ எடைப் பிரி­வில் 75 கிலோ பளு­வைத் தூக்கி தங்­கப் பதக்­கம் வென்­றார்.

அதே கல்­லூ­ரி­யின் மாண­வி­யான ஜென்சி 58 கிலோ எடைப் பிரி­வில் 68 கிலோ பளு­வைத் தூக்கி வெண்­க­லப் பதக்­கம் வென்­றார்.