வட மாகாண கடற்கரை கரப்பந்தில் முடிசூடிய உடுப்பிட்டி மகளிர் கல்லூரி!

Report Print Samaran Samaran in ஏனைய விளையாட்டுக்கள்

வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான கடற்கரை கரப்பந்தாட்டத் தொடரில் 20 வயது பெண்கள் பிரிவில் உடுப்பிட்டி பெண்கள் அணி கிண்ணம் வென்றது.

வல்வை உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இறுதியாட்டத்தில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியும் வவுனியா சிறிசுமணா வித்தியாலயமும் பலப்பரீட்சை நடத்தின.

மூன்று செற்களைக் கொண்டதாக ஆட்டம் அமைந்நது.

முதலிரு செற்களையும் முறையே 21:11, 21:10 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கைப்பற்றி 2:0 என்ற நேர்செற் கணக்கில் வெற்றிபெற்று கிண்ணம் வென்றது உடுப்பிட்டி மகளிர்

கல்லூரி அணி.

மூன்றாமிடத்தை பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்டதரப் பாடசாலை அணி தனதாக்கியது.