தேசிய ரீதியில் அசத்திய பாசை­யூர் சென். அன்­ர­னிஸ் மக­ளிர்: முதல் தடவையாக சாதனை!

Report Print Samaran Samaran in ஏனைய விளையாட்டுக்கள்

கொழும்பு றோயல் கல்­லூ­ரி­யால் நடத்­தப்­பட்ட அழைக்­கப்­பட்ட பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான பளு­தூக்­க­லில் பெண்­கள் பிரி­வில் பாசை­யூர் சென். அன்­ர­னிஸ் மக­ளிர் வித்­தி­யா­லய அணி சம்­பி­யன் கிண்­ணத்­தைச் சுவீ­க­ரித்­தது.

அழைக்­கப்­பட்ட பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான இந்­தத் தொடர் கொழும்பு றோயல் கல்­லூரி உள்­ளக விளை­யாட்­ட­ரங்­கில் நடை­பெற்­றது.

பெண்­க­ளுக்கான பளு­தூக்­க­லில் பாசை­யூர் சென். அன்­ர­னிஸ் மக­ளிர் வித்­தி­யா­ல­ யத்தைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த அ.திசா­லினி 17 வய­துக்கு உட்­பட்ட 48 கிலோ எடைப் பிரி­வில் 95 கிலோ பளு­வைத் தூக்கி தங்­கப் பதக்­கத்­தை­யும்,

53 கிலோ எடைப் பிரி­வில் அ.ஆன்­பி­யூலா 95 கிலோ பளு­வைத் தூக்கி தங்­கப் பதக்­கத்­தை­யும்

90 கிலோ எடைப் பிரி­வில் யே.சுகன்யா 136 கிலோ பளு­வைத் தூக்கி தங்­கப் பதக்­கத்­தை­யும் வென்­ற­னர்.

20 வய­துக்கு உட்­பட்ட 58 கிலோ எடைப் பிரி­வில் மேரி ரதீனா 111 கிலோ பளு­வைத் தூக்கி தங்­கப் பதக்­கத்­தை­யும்

90 கிலோ எடைப் பிரி­வில் யே.மேரி லக்­சிகா

100 கிலோ பளுவை தூக்கி தங்­கப் பதக்­கத்­தை­யும் கைப்­பற்­றி­னர்.