20 வய­துப் பிரிவு 100 மீற்­றர் ஓட்­டத்­தில் சுண்­டுக்­குளி மக­ளிர் கல்­லூரிக்கு தங்கம்!

Report Print Samaran Samaran in ஏனைய விளையாட்டுக்கள்

வட­மா­கா­ணப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் 20 வய­துப் பெண்­கள் பிரிவு 100 மீற்­றர் ஓட்­டத்­தில் சுண்­டுக்­குளி மக­ளிர் கல்­லூரி அணிக்­குத் தங்­கப்­ப­தக்­கம் கிடைத்­தது.

யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் கடந்த திங்­கட்­கி­ழமை முதல் நேற்­று­முன்­தி­னம் வரை இந்­தத் தொடர் நடை­பெற்­றது.

20 வய­துப்­பி­ரிவு பெண்­க­ளுக்­கான 100 மீற்­றர் ஓட்­டத்­தில் சுண்­டுக்­குளி மக­ளிர் கல்­லூ­ரி­யைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த ஏ.மேரி­தர்­சிகா 13.50 செக்­கன்­க­ளில் ஓடி­மு­டித்து தங்­கப்­ப­தக்­கத்­தை­யும், வர்ணச் சான்­றி­த­ழை­யும் தன­தாக்­கி­னார்.

மன்­னார் கௌரி­யம்­பாள் அர­சி­னர் தமிழ்க் கல­வன் பாட­சா­லை­யைச் சேர்ந்த எஸ்.பிரி­ய­தர்­சினி 13.80 செக்­கன்­க­ளில் ஓடி­மு­டித்து வெள்­ளிப்­ப­தக்­கத்­தை­யும்,

உடுப்­பிட்டி மக­ளிர் கல்­லூ­ரி­யைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த ஏ.அபி­னயா வெண்­க­லப் பதக்­கத்­தை­யும் தம­தாக்­கி­னர்.