பாவனைக்கு உதவாத நிலையில் வடக்கின் விளையாட்டு உபகரணங்கள்: அதிகாரிகள் அலட்சியப்போக்கு!

Report Print Samaran Samaran in ஏனைய விளையாட்டுக்கள்

முக்கியமான ஒரு விளையாட்டு நிகழ்வில் பயன்படுத்தப்பட்ட உபகரணம் ஒன்று தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலையில், அதனைக் கட்டை இறுக்கி பயன்படுத்தி போட்டிகளை நடத்தி விநோதம் அண்மையில் நடைபெற்றது.

வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி அண்மையில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது.

விளையாட்டு நிகழ்வில் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் பயன்படுத்தப்பட்ட உபகரணம் இனிமேலும், பயன்படுத்த முடியாத இறுதி நிலையை அடைந்துள்ளது.

அவ்வாறான உபகரணம் ஒன்றை வைத்து போட்டியை நடத்துவதற்கு, நடுவர்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.

அதனை உயர்த்தி அல்லது குறைப்பதற்கு பெரும் சிரமப்பட்டனர்.

ஒரு கட்டத்தில் அது நிலையாக நிற்காமையால், அதற்குள் கட்டையை இறுக்கி நிற்பாட்டினர்.

கோலூன்றிப் பாய்தல் தான், தேசிய விளையாட்டுப் போட்டியில் வடக்குக்கு பல பதக்கங்களை அள்ளி வருகின்றது.

இவ்வாறானதொரு போட்டிக்காக பயன்படுத்தப்படும் உபகரணம் வடமாகாணத்தில் இல்லாதிருப்பது, பெரும் கவலைக்குரியது.

இந்தக் கோலூன்றிப் பாய்தல் போட்டிதான், ஜெகதீஸ்வரன் அனித்தா, நெப்தலி ஜொய்சன், ரி.புவிதரன், நவநீதன், தனுஜா, பவித்திரா, டன்சிகா, நிலானி, ஹெரீனா, டிலக்சன். றிசோத், அன்ரனி பிரசாத், பவிள்சன், டினேஸ், சியானாஸ், வினுசன், என பல தேசிய சாதனை வீரர்களை எங்களுக்கு அடையாளம் காட்டியிருந்தமையும் மறக்கமுடியாது.

ஆயுட்காலம் முடிந்த கோலூன்றிப் பாய்தல் உபகரணத்தை கைவிட்டு, புதிய உபகரணத்தைக் கொள்முதல் செய்து, தரமான வகையில் போட்டிகளை நடத்த வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாகும்.