கந்தளாயில் சிறப்பாக நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண விளையாட்டு விழா!

Report Print Samaran Samaran in ஏனைய விளையாட்டுக்கள்

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 11 வது மாகாணமட்ட விளையாட்டு விழா கந்தளாய் லீலாரெத்தின விளையாட்டு மைதானத்தில் அன்மையில் நடைபெற்று முடிவடைந்தது.

நடந்து முடிந்த கிழக்கு மாகாண மட்ட விளையாட்டு விழாவின் முடிவுகளின்படி மட்.பட்.களுதாவளை மகா வித்தியாலயம் 13 தங்கம், 13 வெள்ளி, 06 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று 123 புள்ளிகளைப் பெற்று தனியொரு பாடசாலையாக சாதித்துள்ளதாக பாடசாலை நிருவாகம் தெரிவித்துள்ளது.

11 வது கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் 1 ஆம் இடத்தை 207 புள்ளிகளைப் பெற்று அம்பாரை கல்வி வலயமும், 2 ஆம் இடத்தை 186 புள்ளிகளைப் பெற்று பட்டிருப்பு கல்வி வலயமம், 3 ஆம் இடத்தை 104 புள்ளிகளைப் பெற்று திருகோணமலை கல்வி வலயம் பெற்றுக் கொண்டுள்ளன.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயம் சார்பாக

களுதாவளை மகா வித்தியாலயம் 13 தங்கம், 13 வெள்ளி, 06 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று 123 புள்ளிகளையும்,

செட்டிபாளையம் மகா வித்தியாலயம் 4 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை பெற்று 40 புள்ளிகளையும்,

பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை 2 வெள்ளி , 2 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று 08 புள்ளிகளையும்,

மண்டூர்-40 அரசினர் தமிழ் கலவன் பாடசாலை 1 தங்கப்பதக்கம் பெற்று 05 புள்ளிகளையும்,

வெல்லாவெளி கலை மகள் மகா வித்தியாலயம் 1 தங்கப்பதக்கத்தை பெற்று 05 புள்ளிகளையும்,

மகிழூர் சரஸ்வதி மகா வித்தியாலயம் 1 வெள்ளிப் பதக்கத்தைப் பெற்று 3 புள்ளிகளையும்,

மண்டூர்-13 விக்னேஸ்வரா வித்தியாலயம் 2 வெண்கலப் பதக்கத்தை பெற்று 02 புள்ளியினையும் பெற்று மட்டக்களப்பு பட்டிருப்புக் கல்வி வலயத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.