பளையில் வறன்ட மைதானத்தில் பயிற்சி பெறும் வீரர்கள்!

Report Print Samaran Samaran in ஏனைய விளையாட்டுக்கள்

பச்­சி­லைப்­பள்ளி பொது­வி­ளை­யாட்டு மைதா­னத்­தில் மாலை நேரங்­க­ளில் விளை­யாட்­டில் ஈடு­ப­டும் வீரர்­கள் குடி­தண்­ணீர் இன்றி அவ­திப்­ப­டும் நிலை காணப்­ப­டு­கின்­றது.

கிளி­நொச்சி மாவட்­டத்­தின் பச்­சி­லைப்­பள்ளி பிர­தேச சபைக்கு உட்­பட்ட பளை பொது­வி­ளை­யாட்டு மைதா­னம் பச்­சி­லைப்­பள்ளி பிர­தே­சத்­திலே காணப்­ப­டு­கின்ற பெரிய மைதா­ன­மாக காணப்­ப­டு­கின்­றது.

இந்த மைதா­னத்­தில்­தான் பிர­தேச செய­லக விளை­யாட்­டுப் போட்­டி­கள் இளை­ஞர் கழக விளை­யாட்­டுப் போட்­டி­கள் எல்­லாம் இடம்­பெற்று வரு­கின்­றன.

சில கழ­கங்­க­ளும் இங்கு போட்­டி­களை ஏற்­பாடு செய்து நடத்தி வரு­கின்­றன. எனி­னும் போதிய குடி­தண்­ணீர் வசதி இல்­லா­ம­லேயே அங்கு விளை­யாட்­டுக்­க­ ளுக்­கான பயிற்­சி­க­ளில் ஈடு­பட முடி­கின்­றது.

இத­னால் மாலை நேரங்­க­ளில் பயிற்­சி­க­ளி­லும் விளை­யாட்­டி­லும் ஈடு­ப­டும் வீரர்­கள் குடி­தண் ணீரை அரு­கில் உள்ள பொலிஸ் நிலை­யத்­தில் சென்று பருக வேண்­டிய சூழ்­நிலை காணப்­ப­டு­கின்­றது.

அங்க பிர­தேச சபை­யி­னால் வழங்­கப்­ப­டும் தண்­ணீரே குடி­தண்­ணீ­ரா­கப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.

இந்த விட­யம் தொடர்­பில் பிர­தேச சபை தவி­சா­ள­ரி­டம் கேட்­ட­போது, ‘‘மைதா­னத்­தில் உள்ள கிணறு இறைத்து வழங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்கை எடுக்­க­ப­டும்.

தண்­ணீர் குழாய்­க­ளில் சில பிரச்­சி­னை­கள் காணப்­ப­டு­கின்­றன. இத­னை­யும் விரைவில் நிவர்தி செய்து வழங்­கப்­ப­டும்’’ என்று தெரி­வித்­தார்.