வெகுவிமர்சையாக நடைபெற்ற வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் மெய்வல்லுநர் போட்டி!

Report Print Samaran Samaran in ஏனைய விளையாட்டுக்கள்

வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் வருடாந்த மெய்வன்மை போட்டி 31/01/2019 வியாழக்கிழமை கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வர் ச.பூலோகராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவனும், முந்நாள் ஆசிரியரும் தற்போதைய யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய சி.சிறீதரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வைத்தியர் இ.கிருஷ்ணலிங்கம் அவர்களும் நோர்வேயிலிருந்து வருகைதந்திருந்த கல்லூரியின் பழைய மாணவன் வே.நகுலநந்தன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இவர்களோடு சிறப்பு விருந்தினராக வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் பழைய மாணவியும், முந்நாள் ஆசிரியையுமான திருமதி துளசிகா சஜீதன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்...

விருந்தினர்கள் அழைத்துவருதலோடு தொடங்கிய மெய்வல்லுநர் போட்டி அணிநடை, குறுந்தூர ஓட்டங்கள், விநோதஉடை போட்டி, பழைய மாணவர்களுக்கான விளையாட்டுக்கள் என்பவற்றுடன் சிறப்பாக நிறைவுபெற்றது.

Latest Offers