வாழும் நாட்டு மொழியை கற்பதின் நன்மைகள்

“மொழி” என்பது தகவல் பரிமாற்றத்திற்கான ஒரு கருவியாகும். “மொழி” என்பது மனித மனத்தின் ஒட்டு மொத்த அறிதல் என்றாகிறது.

அந்த வகையில் மொழி வளர்ச்சி - அறிவு வளர்ச்சி ஆகிய இரண்டும், ஒரு குழந்தையின் மன வளர்ச்சியில் இணைபிரியாது ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக இருக்கின்றன.

ஒரு மனிதனுக்கு எத்தனை மொழி தெரியுமோ அவன் அத்தனை மனிதர்களுக்கு சமனானவன் என கூறுவர்கள். அதாவது ஒரு மனிதனுக்கு 10 மொழிகள் தெரியும் என்றால் அவன் 10 பேருக்கு சமனானவன் ஆகின்றான்.

ஒரு நாட்டிற்குரிய மொழியை தெரியாமல் ஒருவர் அந்த நாட்டுக்கு செல்கின்றார் என்றால் அந்த இத்தில் அவர் உணர்வது ஒன்றைத்தான் “கண்ணைக் கட்டி காட்டில் விட்டதைப் போல்” தான். அதாவது அவர்கள் பேசும் மொழியை புரிந்து கொள்வது என்பது மிகவும் கஷ்டமான ஒன்றாகும்.

அந்த வகையில் இலங்கை மக்கள் உலகின் பல நாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றார்கள். தமிழர்கள் என்ற அடையாளத்துடன் உலகில் பரந்து வாழும் எம்மக்கள் அந்த நாடுகளில் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாக மொழிப்பிரச்சினை காணப்படுகின்றது.

இந்த பிரச்சினையிலிருந்து நாம் மீண்டு வரவேண்டும் என்றால் அந்த நாட்டு மொழியை கற்க வேண்டும்.

அந்த வகையில் சுவிட்சர்லாந்தில் வாழும் தமிழ் மக்களுக்காக KR Center Zürich நடத்தப்படுகின்றது.

இங்கு தமிழ், ஜெர்மன், ஆங்கிலம், பிரான்ஸ், கணிதம் மற்றும் யோகா பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.

இங்கு தமிழ், ஜெர்மன், ஆங்கிலம், பிரான்ஸ், கணிதம் மற்றும் யோகா பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.

நன்கு பயிற்றப்பட்ட ஆசிரியர்களால் இந்த பாடங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன. மாதாந்தம் ஒரு பாடத்திற்கு 50 chf ஆகும்.