தனது மகனின் உயிருக்காக போராடும் தாய்க்கு நீங்களும் உதவுங்கள்

நாமக்கல் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் - நிர்மலா தம்பதியரின் 13 வயதான மகன் குமரன் பிறந்ததில் இருந்தே இதயநோயால் அவதிப்பட்டு வருகின்றார்.

நீண்ட நாட்களாக இந்த நோயால் அவதியுரும் குறித்த சிறுவனுக்கு தற்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் கூறியுள்ள நிலையில், அதற்கு 3 லட்சம் ரூபாய் செலவாகும் எனவும் கூறியுள்ளனர்.

குமரனின் தந்தை சாரதி வேலை செய்து நாளாந்தம் 300 ரூபா வரையில் வருமானம் பெற்று வருகிறார். இந்த பணத்தின் மூலம் அவர்களது நாளாந்த வாழ்க்கைச் செலவுகளை கூட ஈடு செய்ய முடியாத நிலை உள்ளது.

எனினும், தனது மகனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பதற்காக 3 லட்சம் ரூபாய் நிதியை திரட்டும் நடவடிக்கையில் பெரும் சிரமத்தின் மத்தியில் ஈடுபடுகிறார் குமரனின் தந்தை.

இது குறித்து குமரனின் தாய் கூறுகையில்,

தனது மகனை இந்த போராட்டத்திலிருந்து மீட்டு தன்னிடம் மீண்டும் ஒப்படைக்க உதவுமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுக்கிறார்.

மகனுக்கு இவ்வளவு பெரிய பிரச்சினை இருந்த போதும் 13 வருடங்கள் போராடி குமரனை காப்பாற்றி தக்கவைத்துள்ள நிலையில் தற்போது ஆதரவு கரம் நீட்டுமாறு கோரியுள்ளார்கள் குணசேகரன் - நிர்மலா தம்பதியினர்.

மேலதிக தகவலுக்கு லிங்கை கிளிக் செய்யவும்...

https://www.edudharma.com/fundraiser/donate-kumaran-heart-surgery