3 வார குழந்தையின் உயிரைக்காக்க உதவி கோரும் பெற்றோர்

3 வார குழந்தையின் உயிரைக்காக்க பரோபகாரிகளிடம் பெற்றோர் உதவி கோரியுள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த அண்ட்ரூ- பரிமளா தம்பதியினருக்கு எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் திகதி குழந்தை பிறக்க வாய்ப்பிருப்பதாக மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் துரதிர்ஷடவசமாக கடந்த நவம்பர் மாதம் 25 ஆம் திகதி இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் பிரசவத்திற்கு 24 வாரத்திற்குள்ளே குழந்தை பிறந்ததால், எடை வெறும் 690 கிராம் மட்டுமே இருந்துள்ளது.

அதுமட்டுமின்றி குழந்தை மூச்சுவிடுவதற்கும் மிகவும் சிரமப்படுகிறது. குழந்தை இறந்துவிடும் என்று நினைத்த நிலையில் குழந்தையின் இதயத்துடிப்பு தொடர்ந்து இருந்து கொண்டே இருப்பதால், அவரை காப்பாற்றலாம் என்ற நம்பிக்கை பெற்றோர் மற்றும் வைத்தியர்களுக்கு எழுந்துள்ளது.

இதனால் குழந்தை உடனடியாக NICU-வில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. குழந்தை தொடர்ச்சியான மருத்துவ கண்காணிப்பிலே இருந்து வருகின்றது.

இதற்காக குழந்தையின் பெற்றோரான அண்ட்ரூ-பரிமளா தாங்கள் சேமிப்பில் வைத்திருந்த ஒரு இலட்சம் ரூபாயை சிகிச்சைக்காகவே செலவு செய்துவிட்டனர், குழந்தைக்கு தொடர்ந்து மூன்று மாதம் சிகிச்சையளித்தால் காப்பாற்றலாம் என்று கூறப்படுவதால், அதற்கு 14 இலட்சம் ரூபாய் வரை தேவைப்படுவதால், குழந்தையின் பெற்றோர் பரோபகாரிகளிடமிருந்து உதவியை எதிர்பார்க்கின்றனர்.

குழந்தையின் உயிரைக் காக்க உங்களால் முடிந்த சிறிய தொகையை கொடுத்து உதவுங்கள்.

பணம் அனுப்புவதற்கான முழு விபரம்,

Account number: 80808110121951

Account name: Pramila S

IFSC code: YESB0CMSNOC

UPI payment:givetomlppramila5@yesbankltd

Latest Offers

loading...