ZEE5இல் இப்போதே பார்க்க வேண்டிய சிறந்த தமிழ் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள்!

சமீப காலத்தில் உருவாக்கப்பட்ட மிகச்சிறந்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள், தமிழில் அமைந்துள்ளன.

நீங்கள் தமிழ் உள்ளடக்கங்களின் மிகச்சிறந்த மற்றும் மிகப்பெரிய தொகுப்பினைக் கொண்ட ஒரு ஸ்ட்ரீமிங் அடித்தளத்தை விரும்பினால், உங்களுக்கான சிறந்த தேர்வு ZEE5 ஆகும்.

ZEE5 மிகச்சிறந்த தமிழ் பிளாக்பஸ்டர்கள் மற்றும் பிரத்தியேக இணையத் தொடர்களை வழங்குவதோடு மட்டுமின்றி, ZEEஇன், பெரிதும் விரும்பப்படும் சேனலான ZEE தமிழ் நேயர்களுக்கு நேரிடையாகக் காணும் வகையில் அல்லது அனைத்து அத்தியாயங்களையும் பின்ஜ்-வாட்ச் செய்திடும் வகையில் கிடைக்கப்பெறும் ஒரே இடமாகவும் திகழ்கிறது.

ஆக்ஷன், டிராமா மற்றும் ரொமான்ஸ் ஆகிய முழு பேக்கையும் வழங்கிடும் வகையில், நீங்கள் உடனடியாகக் காண வேண்டிய ஐந்து முன்னணி தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் தொடர்களின் பட்டியலை ZEE5 குளோபல் உருவாக்கியுள்ளது!

கரோலின் காமாக்ஷி

ஒரிஜினல் சீரீஸ்

மீனா, ஜியார்ஜியா, ஆஞ்சலீனா மற்றும் ஆன்டோ நடிக்கும் இது, ஒரு மெல்லிய விசாரணைத் தொடராகும்.

இதில், ஒரு பிரபலமான போதை மருந்து கும்பலின் தலைவனைப் பிடிக்க, ஒரு ஃபிரெஞ்சு தேசத்து டிடெக்டிவ் உடன், பாரம்பரிய தமிழ் பிராமணப் பெண் மீனா இணைகிறார்.

ஒரே இலக்கினைக் கொண்டிருந்தாலும், இவ்விரண்டு பெண்களும் இணைந்து பணியாற்றுவதில், இருவேறு துருவங்களுக்கு இடையிலான சிக்கல்கள் ஏற்படுகின்றன.

ஆக்ஷன், நகைச்சுவை மற்றும் இரண்டு உறுதியான பெண்களுக்கு இடையிலான கலவையை வழங்கும் இத்தொடர், ஒரு நிச்சயம் பார்க்கப்பட வேண்டிய தொடராகும்.

டிரெய்லருக்கான இணைப்பு: https://www.zee5.com/zee5originals/details/karoline-kamakshi/0-6-2167/karoline-kamakshi-trailer/0-1-294468

போலீஸ் டயரி 2.0

ஒரிஜினல்

வின்சென்ட் அசோகன், சந்தோஷ் பிரதாப், அன்ஜனா ஜெயபிரகாஷ் மற்றும் பாலாஜி மோஹன் ஆகியோர் நடிக்கும் இந்த நடைமுறை வடிவிலான கிரைம் திரில்லர், தமிழகத்தை உலுக்கிய 52 கொடுமையான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து தண்டிக்கும் இரண்டு சிறப்பு டாஸ்க் ஃபோர்ஸ் குழுவினரின் கதையாகும்.

இதன் அத்தியாயங்கள், சிவகணேஷ், தனுஷ், பா ராஜகணேசன், சு பவன், விக்ரனன் மற்றும் ரமேஷ் பாரதி போன்ற பல்வேறு சிறந்த இயக்குனர்களால் இயக்கப்பட்டுள்ளது.

டிரெய்லருக்கான இணைப்பு: https://www.zee5.com/zee5originals/details/police-diary-20/0-6-2145/police-diary-20-i-trailer/0-1-284073

நேர்கொண்ட பார்வை

திரைப்படம்

அஜித் குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி மற்றும் ரங்கராஜ் பாண்டே நடித்துள்ள இத்திரைப்படம், ஹிந்தியில் வெளியான 'பிங்க்' படத்தில் மறு ஆக்கமாகும்.

அதிக் என்னும் ஒரு இளைஞரின் விரும்பப்படாத செய்கைகளால் பாதிக்கப்பட்டு, தற்காப்பிற்காக அவரை தாக்கும் நிலைக்கு ஆளான மீரா என்னும் பெண்ணைச் சுற்றி இக்கதை நகர்கிறது.

மீராவை பழிவாங்கும் நோக்கில், அதிக் மீரா மற்றும் அவரது மூன்று தோழிகளுக்கு எதிராக, அவர்கள் பாலியல் தொழில் செய்பவர்கள் என்று அதிக் காவல்துறையில் புகார் செய்கிறார்.

வஞ்சங்களும், சூழ்ச்சிகளும் நிறைந்த இந்த நிலையில், இந்திய நீதித்துறை அமைப்பிற்கு எதிராகப் போராடி வழக்கறிஞர் ஒருவர் அப்பெண்களுக்கு நீதியை வழங்குகிறார்.

டிரெய்லருக்கான இணைப்பு: https://www.zee5.com/movies/details/nerkonda-paarvai/0-0-90827

டாப்லெஸ்

11 ஃபிப்ரவரி முதல் ப்ரீமியர் செய்யப்படவுள்ள அசல் சீரீஸ்

குரு சோமசுந்தரம், பஸாக் கஸீலியர் பிரசாத், கோகுல் ஆனந்த் மற்றும் ரோஹித் முரளிதரன் ஆகியோர் நடிக்கும் டாப்லெஸ் ஒரு, ZEE5 தமிழ் ஒரிஜினல் ஆக்ஷன் டிராமா ஆகும்.

நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு நிர்வாண-ஓவியம் ஏலத்தில் மிகுந்த பரபரப்பினை உருவாக்குகிறது.

ஆன்மீக நம்பிக்கை கொண்டதொரு அரசியல்வாதி மற்றும் பலர் அதை ஏலம் கேட்கின்றனர். போட்டி தீவிரமாக, ஓவியத்திற்குப் பின்னால் உள்ள ரகசியம் வெளிவருகிறது. அதைத் தொடர்ந்து நடைபெறும், கொள்ளை, ஆக்ஷன் மற்றும் டிராமா அனைத்தும் திரையில் காண வேண்டியதாகும்.

டிரெய்லருக்கான இணைப்பு: https://www.zee5.com/zee5originals/details/topless/0-6-2454/topless-trailer/0-1-334361

கென்னடி கிளப்

திரைப்படம்

ஒரு பெண்கள் கபடி குழுவைச் சுற்றி நடைபெறும் இந்த ஸ்போர்ட்ஸ் - டிராமா கதை, இந்திய விளையாட்டுத் துறையில் வெற்றி பெற அப்பெண்கள் அணி சந்திக்கும் பல்வேறு சவால்களை களமாகக் கொண்டுள்ளது.

ஆ.சசிகுமார், பாரதிராஜா மற்றும் மீனாக்ஷி கோவிந்தராஜன் அவர்களை முன்னணி கதாபாத்திரத்தில் கொண்டுள்ள இக்கதை, உங்கள் கனவை நனவாக்க எந்தவொரு தடையும் கடந்து செல்ல உங்களை உத்வேகிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

டிரெய்லருக்கான இணைப்பு: https://www.zee5.com/videos/details/kennedy-club-trailer/0-0-134873

இவைகளும் மற்றும் மேலும் பல உள்ளடக்கங்களும், ZEE5இல், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் ஸ்ட்ரீம் செய்யப்பட தயாராகவுள்ளது.

கூகுள் பிளே ஸ்டோர், ios ஆப் ஸ்டோர் அல்லது ஹுவாவே ஆப்கேலரியிலிருந்து ZEE5ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்.

சாம்சங் ஸ்மார்ட் TVகள், ஆப்பிள் TVகள் மற்றும் அமேஸான் ஃபயர் TV ஆகியவற்றிலும் மற்றும் www.ZEE5.com இலும் இவை கிடைக்கப்பெறும்.