தமிழ் - முஸ்லிம் மக்களின் பார்வையில் யார் இந்த சசிகுமார்!

நாட்டில் தற்போது தேர்தல் களம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த நிலையில் கம்பஹா மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் களமிறங்கியிருக்கும் ச.சசிக்குமார் தொடர்பான ஒரு விசேட பார்வை இதோ,

சமூக ஆர்வலராகவும் வெற்றிகரமான தொழிலதிபராகவும் இயங்கி வரும் சசிக்குமார் அவர்கள், இம்முறை கம்பஹா மாவட்டத்திற்கான தமிழ் வேட்பாளராக களமிறங்கி உள்ளார்.

அரசியலில் தடம்

சமூகத்தில் தமிழ் பேசும் மக்களின் இக்கட்டான நிலைகளையும் அவலங்களையும் தனது ஆரம்ப காலம் முதலே கண்டு வந்த சசிக்குமார், தன்சொந்த மக்கள் பிரச்சினைகளையும் பாராளுமன்றதினூடாக எடுத்துரைத்து தன்னிறைவான சமூகம் ஒன்றை உருவாக்கும் கனவை தனக்குள் சுமந்து வந்திருக்கிறார்.

அக்கனவு இப்போது, அவரது அரசியல் பிரவேசம் மூலமாக புதிய பரிமாணத்தை அடைந்திருக்கிறது. சமூக விடயங்களில் இதுவரை தனியொரு பிரஜையாக தம் நண்பர்களுடன் இணைந்து இயன்றவரைக்கும் செயற்பட்டத்தைப் போல, இனிவரும் காலங்களில் கம்பஹா வாழ் தமிழ், முஸ்லிம் மக்களின் அனுமதியுடன், அவர்கள் தேர்ந்தெடுக்கும் சரியான முடிவுகளுடன் நாடாளுமன்ற உறுப்பினராக கடமையேற்று அரசியல் சட்டதிட்டத்திற்கு அமைய தேசிய அளவிலான வளங்களைக்கொண்டு முழு அர்ப்பணிப்புடன் செயலாற்றி வளம்மிக்க சமுதாயத்தை கட்டியெழுப்புவதே கண்களைத் திறந்துகொண்டு அவர் காணும் கனவாகும்.

இக்கனவினை நிறைவேற்ற அவர் தூங்காத இரவுகள் எத்தனையோ! இக்கனவினை நிறைவேற்ற மதபேதமின்றி தமிழ் முஸ்லிம் மக்கள்

அவருக்கு தந்துவரும் ஆதரவானது கண்டிப்பாக அவரை பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கு முன்னுதாரணம்.

ஆகவே எம்மக்கள் அனைவரும் ச. சசிகுமார் அவர்களுக்கு தனது பெறுமதிமிக்க வாக்குகளை தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதோடு, பெரும்பான்மையினருக்கு உங்களது வாக்குகளை செலுத்தினாலும் ஒரு போதும் தமிழர்கள் வாக்குகளால் வந்தோம் என்றோ அல்லது தமிழர்களுக்கான தேவைகளை நீங்கள் நேரடியாக சென்று உரிமையோடு கேட்கவோ முடியுமா?

சசிக்குமார் போன்றவர்களிடம் உரிமையோடு கேட்க முடியும் காரணம் நண்பன், அயலவன், நம்மில் ஒருவன்.

சிந்தித்து வாக்களிப்போம், வாக்குகள் சிதறாமல், தமிழ் பேசும் மக்களாய் ஒன்றிணைவோம்!

(கம்பஹா வாழ் நண்பர்கள், கம்பஹா வாழ் நலன் விரும்பிகள், கம்பஹா வாழ் தமிழ் அமைப்புகள், கம்பஹா வாழ் முஸ்லிம் அமைப்புகள் )