சவால்களுக்கு முகங்கொடுக்கவுள்ள இலங்கையின் புது முயற்சி!

Report Print Ajith Ajith in பாராளுமன்றம்

காணாமல் போன ஆயிரக்கணக்கானவர்களின் நிலைமை தொடர்பில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் பல்வேறு சவால்களை எதிர் நோக்க வேண்டிவரும் என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலக அமைப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரித்தானியா,

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைப்பது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் குறித்த நாம் திருப்தி அடைகின்றோம்.

இந்த நடவடிக்கையின் மூலம் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தமது உறவுகள் தொடர்பில் தகவல்களை கண்டறிவதற்கான வாய்ப்புக்கள் உருவாகும் என்பதுடன் நல்லிணக்கத்துக்கும் வாய்ப்பு உண்டாகும்.

எனினும் காணாமல் போன ஆயிரக்கணக்கானவர்களின் நிலைமை தொடர்பில் இந்த அலுவலகம் சவால்களை எதிர்நோக்கவேண்டியிருக்கும்.

அத்துடன் விசாரணைகளுக்காக அதிக காலம் எடுக்கும் என்றபோதிலும் விடாமுயற்சி அவசியம் என்றும் பிரித்தானிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

Comments