வற் வரி மக்களுக்கு பாதகமானதெனில் மீண்டும் போராட்டம் வெடிக்கும்

Report Print Kamel Kamel in பாராளுமன்றம்

வற் வரி அதிகரிப்பு குறித்த சட்டம் மக்களுக்கு பாதிப்பானது என்றால் மீளவும் அதற்கு எதிர்ப்பு வெளியிடப்படும் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

வற் வரி அதிகரிப்பு குறித்து கொழும்பு ஊடகமொன்று கேள்வி எழுப்பிய போது. அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

வற் வரி அதிகரிப்பு குறித்த உத்தேச திருத்தச் சட்டம் எவ்வாறு திருத்தி அமைக்கப்பட்டாலும் மக்களுக்கு ஆபத்தானது என்றால் மீளவும் அதனை வாபஸ் பெற்றுக்கொள்ள செய்யப்படும்.

வற் வரி அதிகரிப்பு குறித்த சட்டத்தை நாமே முதல் தடவை தடுத்திருந்தோம். இந்த சட்டம் மக்களை நெருக்கடிக்குள் ஆழ்த்தும் மக்களை சிரமங்களுக்கு உள்ளாக்கும் என்பதனை புரிந்து கொண்டு நாம் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டோம்.

இதன் காரணமாகவே நாம் மக்களின் பக்கம் இருந்து போராட்டங்களை முன்னெடுத்திருந்தோம். அதனுடன் நின்று விடாது நாம் நீதிமன்றத்திற்கும் சென்றிருந்தோம்.

இதன் காரணமாகவே அந்த சட்டம் அமுல்படுத்தப்படவில்லை. தற்போது மீளவும் வற் வரி அதிகரிப்பு குறித்த சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது.

மக்களுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய சட்டமென்றால் நிச்சயம் அதற்கு எதிராக போராட நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...

Comments