ரணிலின் அர்ப்பணிப்பிற்கு பாராட்டுக்களை பொழியும் உறுப்பினர்கள்

Report Print S.P. Thas S.P. Thas in பாராளுமன்றம்
115Shares

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாட்டில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவின் அர்ப்பணிப்பு தொடர்பில் நாங்கள் ஆச்சரியமடைகிறோம் என அரசியல் அமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் புதிய அரசியல் அமைப்பின் வரைபை தயாரித்து வருகின்ற அரசியலமைப்பின் நிர்ணய சபையின் பிரதான வழிநடத்தும் குழுவின் தலைவராக பிரதமர் செயற்பட்டுவருகின்றார்.

இந்த குழுவில் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெறுகின்றனர்.

அக்குழுவில் அங்கம் வகிக்கும் 21 எம்.பி.க்களில் அதிகமானோர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் புதிய அரசியலமைப்பு குறித்த அர்ப்பணிப்பான செயற்பாடு தொடர்பில் பாராட்டுக்களை தெரிவித்துவருகின்றனர்.

அதாவது புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் விடயத்திலும், பிரதான வழிநடத்தல் குழுவின் கீழ் காணப்படுகின்ற இனப்பிரச்சினை தீர்வு விடயம் தொடர்பிலும் ரணில் விக்ரமசிங்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நல்லதொரு கருத்தினை வெளியிட்டுள்ளனர்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை மாற்றம், தேர்தல் முறைமை மாற்றம், இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டம் போன்றவை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார்.

இந்த அரசியலமைப்பு விடயத்தில் பிரதமர் ரணில் காட்டும் அர்ப்பணிப்பும் ஆர்வமும் தேசிய அரசாங்கத்தில் காட்டுவாராயின் அரசியல் செயற்பாடுகள் மிகவும் சிறப்பாக அமையும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

அரசியலமைப்பு நிர்ணய சபையின் கீழ் செயற்படுகின்ற இந்த பிரதான வழிநடத்தல் குழுவே புதிய அரசியலமைப்பின் வரைபை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Comments