பொய்களில் மீன் பிடிக்க வேண்டாம் பாராளுமன்றத்தில் அமைச்சரின் எச்சரிக்கை - மூக்குடைப்பட்ட உறுப்பினர்

Report Print Mawali Analan in பாராளுமன்றம்
402Shares

நேற்று கிளிநொச்சியில் பொலிஸார் இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வடக்கில் பொலிஸார் பாதுகாப்பற்ற நிலையே தொடர்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன கூறினார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்,

வடக்கில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றது இது தொடர்பில் அரசு என்ன தீர்மானம் எடுக்கப்போகின்றது. பொலிஸாருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுகின்றது பாதுகாப்பற்ற நிலையிலேயே அவர்கள் அங்கு சேவையாற்றி வருகின்றார்கள்.

இதற்கு என்ன பதில் கொடுக்கப்போகின்றீர்கள் வடக்கு பொலிஸாருக்கு உரிய பாதுகாப்பினை கொடுப்பீர்களா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல முன்வந்தார்,

நேற்றே இதற்கான பதிலை பிரதமர் அளித்துவிட்டார் அப்போது நீங்கள் குழப்ப வேண்டாம்.

நாட்டில் இடம்பெறும் அனைத்தையும் இனவாதமாக மாற்றுகின்றீர்கள். ஒவ்வொறு நாளும் காலையில் பிரச்சினையுடனேயே பாராளுமன்றத்திற்கு வருகின்றீர்கள் அதனை விட்டு விடுங்கள்.

பொய்களிடையே மீன் பிடித்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டாம் ஏன் தெற்கில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறுவதில்லையா? இலாபநோக்கோடு செயற்படாதீர்கள் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல எச்சரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Comments