வற் வரி திருத்தம் நவம்பர் 01 முதல் அமுலில்!

Report Print Ramya in பாராளுமன்றம்
187Shares

வற் வரி திருத்தம் அடுத்த மாதம் 01 ஆம் திகதி அமுல்ப்படுத்தப்படும் என நிதி அமைச்சு இன்று(27) அறிவித்துள்ளது.

இதேவேளை தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியும் அடுத்த மாதம் 01 ஆம் திகதி அமுலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கப்பட்ட வற் வரி திருத்த சட்டமூலம் நேற்றைய தினம் நாடாளுமன்றில் அதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

11 சதவீதமாக இருந்த வரி 15 சத வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments