விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்திற்கும் ஒரே இடத்தில் பயிற்சி..! - யுத்தத்திற்கு பின்னர் வடக்கின் நிலை என்ன?

Report Print Mawali Analan in பாராளுமன்றம்
445Shares

விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்திற்கும் ஒரே இடத்தில் பயிற்சிகள் வழங்கப்பட்டது என்பது எத்தனை பேருக்கு தெரியும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

நாட்டின் இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் ஒரே இடத்தில் வைத்து பயிற்சி கொடுக்கப்பட்டது. இரு தரப்பினருக்கும் ஒரே மாதிரியான பயிற்சியினையும் ரஷ்ய அரசே கொடுத்தது.

ஆனாலும் முடிந்தவரையில் இவர்கள் இரு தரப்பினரையும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளாத வகையில் பார்த்துக் கொள்ளப்பட்டது ஆனாலும் பல சந்தர்ப்பங்களில் அவர்கள் நேராகவும் சந்தித்துக் கொண்டார்கள்.

இதனால் இந்த விடயம் வெளிப்படையாகிப்போனது. இதனைப்பற்றி இது வரையிலும் அரசு ஒன்றையுமே தெரிவிக்கவில்லை. என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது அதனால் பிரச்சினைகளின் அடி எதுவென கண்டறியப்பட வேண்டும்.

இதேவேளை இலங்கையில் எந்த இடத்திலும் எவருக்கும் தமது வழிபாட்டு தலங்களை அமைத்துக் கொள்ள உரிமை இருக்கின்றது.

வடக்கில் விகாரைகள் அமைக்கப்படக் கூடாது என விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளமை இனவாதிகள் பிரச்சினைகளை தூண்டிவிட காரணமாக அமைந்து விட்டது எனவும் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இவரது கருத்திற்கு மறுப்பு தெரிவிக்க முன்வந்த பாராளுமன்ற உறுப்பினர் ஞா. சிறீதரன் பதில் அளிக்கும் போது,

விகாரைகள் அமைப்பதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கிளிநொச்சியில் ஒரு விகாரையே இருந்தது அதனை நாம் ஒத்துக்கொள்கின்றோம்.

ஆனால் 2009இற்கு பின்னரே ஆக்ரமிக்கும் வகையில் அதிகமான விகாரைகள் அமைக்கப்படுகின்றது அதனையே தவிர்க்க சொல்லி கேட்கின்றோம்.

நாம் வெள்ளவத்தையில் அல்லது காலிமுகத்திடலில் கோயில்களை அமைத்தால் ஒத்துக் கொள்வீர்களா? இப்போது உள்ள வடக்கின் நிலையை வந்து பாருங்கள் அப்போது புரியும்.

முடியாவிட்டால் சொல்லுங்கள் நான் அழைத்துச் செல்கின்றேன். யுத்தத்திற்கு பின்னர் என்ன நடந்துள்ளது என்பது பற்றி புரியும் எனவும் சிறீதரன் பதில் அளித்தமை குறிப்பிடத்தக்கது.

Comments