கடவுளையே குழப்பும் இலங்கை மக்கள்..! நல்லூருக்கு படையெடுக்கும் பௌத்த மக்கள்..!

Report Print Mawali Analan in பாராளுமன்றம்

இந்த நாட்டு மக்கள் முட்டாள்களா என்ற கேள்வியே இப்போது எழுகின்றது. எதற்காக மோதிக் கொள்கின்றோம் என்பது தெரியாமலே சண்டை போடுகின்றார்கள் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

இன்று பாராளுமன்ற விவாத உரையில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். மேலும் தொடர்ந்த அவர்,

இலங்கையில் பிரச்சினைகள் என்ன என்பதே புரியாத நிலை ஏற்பட்டு விட்டது, யுத்தத்திற்கு பின்னர் நல்லூருக்கும் திருகோணமலைக்கும் அதிக அளவில் வழிபாடுகளுக்கு செல்வது பௌத்த மக்களே.

அதேபோன்று அனைத்து விகாரைகளிலும் இந்துக் கடவுள்கள் இருக்கின்றார்கள். சிங்கள மக்கள் இந்துக் கடவுள்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார்கள்.

மேலும் நேர்த்திக்கடன்களையும் முன்வைக்கின்றார்கள். கடவுள்கள் என்று பார்க்கும் போது பாகுபாட்டினை காட்டவில்லை.

அதேபோன்றே தமிழ் மக்களும் புத்தபிரானுக்கு வணக்கத்திற்குரிய மரியாதை செலுத்தியே வருகின்றனர். இவ்வாறாக கடவுள்கள் இடையே எவரும் பாரபட்சம் காட்டுவது இல்லை.

ஆனாலும் வெளியே வந்து இனங்களாகப் பிரிந்து மோதிக்கொள்கின்றார்கள். கடவுள்கள் இதனைப்பார்க்கும் போது குழப்பமடைந்து விடுவார், இந்த மக்கள் முட்டாள்கள் என்று எண்ணிவிடுவார்.

அரசியல் இலாபங்களுக்காக இனங்களை பயன்படுத்தி கொள்வதனாலேயே பிரச்சினைகள் ஏற்படுத்தப்படுகின்றது. முதலில் அவை நிறுத்தப்பட வேண்டும்.

ஒற்றுமை மிக்க நல்லிணக்க நாட்டினைக் கட்டியெழுப்புவது இப்போது முக்கிய கடற்பாடாகும் எனவும் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மனிதர்களை பார்த்து சிரிக்கும் தெய்வங்கள்!

பௌத்த விகாரைகளில் புத்த பகவானுக்கு மேலதிகமாக சிவன், பிள்ளையார், விஷ்ணு தெய்வங்களின் சிலைகள் இருப்பதாகவும் அவற்றை வணங்கி விட்டு வீதியில் இறங்கி கைகலப்பில் ஈடுபட்டு கொள்வதாகவும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இவற்றை பார்த்து கொண்டிருக்கும் தெய்வங்கள் இலங்கை மனிதர்கள் படு முட்டாள்கள் எனக் கூறி சிரிக்கக் கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதேபோல் கதிர்காமம், நல்லூர், கோனேஸ்வரம் போன்ற கோயில்களுக்கு அதிகளவில் சிங்கள பௌத்தர்கள் செல்கின்றனர்.

நயினாதீவு நாகதீப விகாரையில் நடைபெறும் பூஜைகளில் இந்து மக்கள் அதிகளவில் கலந்து கொள்கின்றனர்.

இலங்கை மக்கள் மத்தியில் நல்லிணக்கம் தொடர்பான பிரச்சினையில்லை. உயர்மட்ட அரசியல்வாதிகள் அடிப்படைவாதிகளாக செயற்படுகின்றனர்.

சிவனொளிபாத மலை அடிவாரத்தில் ஹொட்டல் நிர்மாணிக்கப்படுவது மதம் தொடர்பான பிரச்சினை அல்ல அது சுற்றாடல் தொடர்பான பிரச்சினை எனவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Comments