பாராளுமன்றம் என்றாலே இப்போது சுவாரசியமான இடமாக மாறிவிட்டது. ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொள்வதிலும், குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக்கொள்வதிலுமே பலர் முன்னிலை வகிக்கின்றனர்.
நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் உரையாற்றும் போது பலர் உறங்கி விடுவது என்னமோ நாம் வழமையாக பார்க்கும் விடயமே.
நேற்றைய தினம் ஓர் பாராளுமன்ற உறுப்பினர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது அவர் அருகில் அமர்ந்திருந்த மற்றுமோர் உறுப்பினர் தன்னையறியாது உறங்கியுள்ளார்.
அதிக உடல் எடையைக் கொண்ட அவர் உறங்கிய போது அவருடைய நிறையை தாங்கிக்கொள்ள முடியாத கதிரை உடைந்து அவர் கீழே விழுந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஏனைய உறுப்பினர்கள் தூக்குங்கள் ... தூக்குங்கள் என கூச்சலிட்டு அவரை தூக்கியுள்ளனர்.
மக்களின் குறைகளை தீர்க்க பாராளுமன்றத்திற்கு சென்று அங்கே உறங்கியது மட்டுமல்லாமல் கீழே விழுந்தமை தற்போது பலவாறாக விமர்சிக்கப்படுகின்றது.
அதேசமயம் ஒருவர் உரையாற்றிக்கொண்டிருக்கும் போது, மற்றொரு பக்கம் அமர்ந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் தொலைபேசியை பார்ப்பதிலேயே கருத்தாக இருந்துள்ளார்.
குறிப்பாக கீழே ஒருவர் விழுந்து அமளி துமளியாக பாராளுமன்றம் மாறிய போதும் அதனையும் கண்டு கொள்ளாது தொலைபேசியில் மூழ்கியிருந்துள்ளார் அருகில் அமர்ந்திருந்த உறுப்பினர்.
நாட்டிற்கு மிக முக்கியமான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் ஒருவர் உறங்கி விழுந்ததும், மற்றொருவர் தொலைபேசியில் கருத்தாக இருந்ததும் தற்போது சமூக வலைத்தளங்களில் பலவாறு விமர்சிக்கப்படுகின்றது.