மனிதனாக பிறந்தவர்கள் இன்று இறைவனாக போற்றப்படுகின்றார்கள்...! பாராளுமன்றில் வலியுறுத்திய கூட்டமைப்பு

Report Print Murali Murali in பாராளுமன்றம்
157Shares

மனிதனாக பிறந்தவர்கள் இன்று இறைவனாக போற்றப்படுகின்றார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் கௌதம புத்தர், யேசு கிறிஸ்து, சுவாமி விவேகானந்தர், நபிகள் நாயகம் என பலரும் இன்று இறைவனாக போற்றப்படுகின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றில் இன்று கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

சொந்த மதத்தின் புனித தன்மையை நசுக்க கூடிய வகையிலான செயற்பாடுகளை யார் முன்னெடுத்தாலும் அதனை கட்டுப்படுத்த வேண்டியது நல்லாட்சி அரசின் கடமையாகும்,

மேலும், மதத்தை அரசியலுக்கு பயன்படுத்த கூடாது. மதத்தை வைத்துகொண்டு அரசியல் செய்கின்றவர்கள் வங்குரோந்து அரசியல்வாதிகளாகவே இருப்பார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments