நாட்டு மக்களை ஏமாற்றும் சதித்திட்டமே உமா ஓயா வேலைத்திட்டம் : பாராளுமன்றில் முழங்கிய குரல்

Report Print Gokulan Gokulan in பாராளுமன்றம்
72Shares

சிங்கள மக்களுக்கும் சரி வெளிமடை பண்டாரவளை முதலான தோட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கும் சரி உமா ஓயா வேலைத்திட்டம் எந்த நன்மையையும் பெற்றுக் கொடுக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்

குறித்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரே மக்களிடத்தில் குடிநீர்பிரச்சினை அதிகரிக்கத் தொடங்கியது. விவசாய நிலங்கள் மக்களிடம் இருந்து அபகரிக்கபட்டமையினால், விவசாயம் கைவிடப்பட்டதோடு தரிசு நிலங்கள் அதிகமாகிப் போனது.

வேலை வாய்ப்புகள் இல்லாமல் போனது. இதனால் நீதிமன்றங்கள் முன்பாக வேலைவாய்ப்புக்காக நீதி கோரி காத்திருக்கும் நிலைக்கு உமா ஓயா திட்டம் மக்களை கொண்டு சென்றுள்ளது.

எனவே, கூடிய விரைவில் குறித்த திட்டத்தை அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Comments