தனது சமூகத்தில் பின்பற்றப்படும் மொழியையோ, மதத்தையோ விரும்பாத ஒருவர் எவ்வாறு தனது மதத்தை பாதுகாப்பார்..? எவ்வாறு தனது இனத்தை மதிப்பார் என நம்ப முடியும்...? என பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்
நாட்டிற்கு மிகச்சிறந்த நீதியமைச்சர் ஒருவர் நியமிக்க பட்டிருக்கிறார். அவரால் மாத்திரமே நாட்டின் புத்த சாசனத்தை செம்மையான முறையில் வழிநடத்த முடியும்.
மக்களால் பெரிதும் போற்றப்பட்ட சோபித தேரர் வாழ்ந்த இந்த நாட்டில்தான் இன வாதத்தை பரப்பும் சுமன ரத்ண தேரரும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.
குறித்த தேரரது செயற்பாடு அண்மைக்காலத்தில் இலங்கை முழுவதும் பேசப்பட்டு வரும் ஒரு விடயமாகி விட்டது. மகான் புத்தரின் கொள்கையை பாதுகாக்கும் இந்த நாட்டில் பௌத்த மதத்தை சீரழிக்கும் ஒருவர் வாழ அனுமதிக்க முடியாது.
தனது சமூகத்தில் பின்பற்றப்படும் மொழியையோ மதத்தையோ விரும்பாத ஒருவர் எவ்வாறு தனது மதத்தை பாதுகாப்பார் தனது இனத்தை மதிப்பார் என நம்ப முடியும்.
ஆனால் இது தொடர்பில் எந்த விதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே புத்தசாசன அமைச்சர் தனது பங்கை சிறப்பாக நிறைவேற்றி எமது மதத்தையும் மொழியையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்