ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறது - பாராளுமன்றில் சிறிதரன்

Report Print Sujitha Sri in பாராளுமன்றம்
126Shares

மகிந்தானந்த அலுத்கமகே உரையாற்றும் போது மலையக மக்களுக்காக பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக கூறினார். இது ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுவது போன்று உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

200 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து வந்து இன்றுவரையில் எந்தவொரு அந்தஸ்து அங்கிகாரமும் இன்றிய நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மலையக மக்களுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்பட வேண்டும்.

பொருளாதாரம், கல்வி மற்றும் சுகாதாரம் என்பவற்றில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறார்கள்.

சொந்தமான நிலம் வழங்கப்படவில்லை. அதற்காக தீர்வு இப்பொழுது அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் 7 பேர்ச்சஸ் நிலம் வழங்கும் திட்டம் சாத்தியமற்றது.

குறைந்தது ஒரு ஏக்கர் நிலமாவது வழங்கப்பட வேண்டும் என வலியுருத்தினார்.

மேலும், க.பொ.த சாதாரணதர பரீட்சையில் சொந்த மொழியில் கூட 35 வீத மாணவர்களே சித்தியடைகிறார்கள்.

இது அவர்களின் கல்வியறிவிற்கான பின்தங்கிய நிலையை காட்டுகிறது. அதனால் அவர்களின் கல்வி வளர்ச்சிக்கான விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு மலையக மக்களும் நாட்டில் மதிக்கத்தக்க நிலைக்கு உயர்த்தப்பட வேண்டும் என சிறிதரன் இதன்போது சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

Comments