2017ம் ஆண்டிற்கான முதல் நாடாளுமன்ற அமர்வு இன்று!

Report Print Kamel Kamel in பாராளுமன்றம்

இந்த ஆண்டிற்கான முதல் நாடாளுமன்ற அமர்வுகள் இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

உத்தேச அரசியல் அமைப்பு குறித்த விவாதம் இன்றைய தினம் நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இந்த விவாதத்தை ஒத்தி வைப்பதற்கு அரசியல் அமைப்புச் சபை தீர்மானத்திருந்தது.

இதன்படி இந்த விவாதம் கால வரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் மூன்று நாட்களுக்கு விவாதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும் நாடாளுமன்ற கூட்டம் மீளவும் இந்த மாதம் 24ம் திகதி நடைபெறும் என நாடாளுமன்றின் பிரதிப் பொதுச் செயலாளர் நீல் இத்தேவெல தெரிவித்துள்ளார்.

Comments