அமைச்சர்கள் செய்யும் மோசடி வர்த்தகம் - ஜனாதிபதி கண்காணிப்பாரா?

Report Print Kamel Kamel in பாராளுமன்றம்
33Shares

அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எமது நாட்டின் அரச வருமானத்தை அதிகரிக்க வேண்டுமெனக் கூறிக்கொள்ளும் தற்போதைய அரசாங்கம் அரிசியை உரிய விலைக்கு மக்களுக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையிட்டு அரசாங்கம் வெட்கப்பட வேண்டும். அனைத்து அமைச்சர்களும் இதற்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இலங்கை பாக்கு வகைகளுக்கு இந்தியாவில் நல்ல விலை கிடைக்கின்றது. எனினும் சில அமைச்சர்கள் இந்தியாவிலிருந்து பாக்கு இறக்குமதி செய்து மீளவும் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்து பாரிய வருமானம் ஈட்டுகின்றனர்.

இந்த விடயம் குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்திய காரணத்தினால் இந்த வர்த்தகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இது குறித்தும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

Comments