சிறையில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதான அமர்வுகளில் மட்டுமே பங்கேற்க முடியும்

Report Print Kamel Kamel in பாராளுமன்றம்
31Shares

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றின் பிரதான அமர்வுகளில் பங்கேற்க சந்தர்ப்பம் உண்டு என நேற்றைய தினம் நாடாளுமன்றில் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அவையில் நடைபெறும் ஏனைய துணைக்குழு அமர்வுகள்,கூட்டங்களில் பங்கேற்க தடுப்புக் காவலில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் கிடையாது எனவும் கூறியுள்ளார்.

மேலும், நாடாளுமன்றின் பிரதான அமர்வுகள் நடைபெறாத நிலையில் நடைபெறும் துணைக்குழுக் கூட்டங்களில் விளக்கமறியலில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பங்கேற்க அனுமதி அளிக்க முடியமா என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானிக்கப்படும் என கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்

Comments