தமிழ் பெண் அரசியல்வாதிக்கு நாடாளுமன்றில் கௌரவம்...

Report Print Ramya in பாராளுமன்றம்
187Shares

மகளிர் தினத்தை முன்னிட்டு, நாடாளுமன்றில் சிறந்த பங்களிப்பை ஆற்றிய பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

2015ஆம் ஆண்டு 09ம் மாதம் 01ஆம் திகதி முதல் 2017ஆம் ஆண்டு 01ஆம் மாதம் 31 ஆம் திகதி வரையானக் காலப்பகுதி வரையில் சிறந்த பங்களிப்பை ஆற்றிய முதல் ஐந்து இடங்களைப் பிடித்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பிலேயே தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா முதல் இடத்தையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

முறையே, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயாணி விஜேவிக்கிரம மற்றும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமேதா ஜீ. ஜயசேன ஆகியோர் 3, 4 மற்றும் 5 ஆம் இடங்களைப் பெற்றுள்ளனர்.

Comments