இலங்கை நாடாளுமன்றில் தொடர்ந்து பரபரப்பு நிலை நீடிப்பதால் சபை மீண்டும் மூன்றாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் ஒத்திவைத்து மீண்டும் கூடியபோது, தேசிய சுதந்திர முன்னணியை தனியான கட்சியாக அறிவிக்க வேண்டும் என முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் மீண்டும் பரபரப்பு நிலை ஏற்பட்டது.
சபாநாயகரின் அறுவுறுத்தல்களை கவனத்திற்கொள்ளாது பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தொடர்ந்தும் சபையில் கருத்துக்களை முன்வைக்க முயன்றதால் சபை நடவடிக்கைகளை தொடர முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, தினேஸ் குணவர்தனவை மீண்டும் நாடாளுமன்றில் இருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.