புதிய நிதி அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த கூட்டு எதிர்க்கட்சி

Report Print Ramya in பாராளுமன்றம்

புதிய நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மங்கள சமரவீரவுக்கு கூட்டு எதிர்க்கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே, கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும நேற்றைய தினம் எழுப்பியிருந்த கேள்விக்கு நிதியமைச்சர் மங்கள சமரவீர இன்றைய தினம் பதில் வழங்கியுள்ளார்.

"டளஸ் அழகப் பெருமவிற்கு புதிய காலணிகள் அணிவது என்பது கடினமானதாக தான் இருக்க வேண்டும்" என்று பதிலளித்துள்ளார்.

முன்னாள் நிதி அமைச்சர் மற்றும் புதிய வெளிவிவகார அமைச்சரான ரவி கருணாநாயக்கவின் கடந்த இரண்டு வருட எதிர்கொண்ட சவால்களுடன் தான் முன்னோக்கிச் செல்ல தயாராக இருப்பதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

முன்னதாக நிதி அமைச்சராக மங்கள சமரவீரவை தெரிவு செய்தமை தொடர்பில் டளஸ் அழகப்பெரும,நேற்றைய தினம் கேள்வி எழுப்பியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments