நாடாளுமன்றத்திற்கு அருகில் பாதுகாப்பு தீவிரம் - பொலிஸார் குவிப்பு

Report Print Vethu Vethu in பாராளுமன்றம்

நாடாளுமன்றத்திற்கு நுழையும் வீதியில் கடுமையான பொலிஸ் பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய அந்த பகுதியில் கலகம் தடுக்கும் குழுவினர், வாகனங்கள் மற்றும் வீதி தடைகள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஊனமுற்ற இராணுவத்தினர் இன்றைய தினம் எதிர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

இதனால் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.