நான்கு விமானங்களால் நாடாளுமன்றத்தில் சூடான வாக்குவாதம்

Report Print Steephen Steephen in பாராளுமன்றம்

இலங்கையின் கோரிக்கைக்கு அமைய இரண்டு நாடுகளில் தயாரிக்கப்படும் 4 விமானங்களின் தயாரிப்பு பணிகளை நிறுத்துமாறு கோப் குழுவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப் குழுவின் தலைவரான சுனில் ஹந்துன்நெத்தி நாடாளுமன்றத்தில் இதனை இன்று தெரிவித்துள்ளார்.

ஹந்துன்நெத்தியின் கருத்துக்கு சபை முதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல எதிர்ப்பு வெளியிட்டதை அடுத்து, சபையில் சூடான வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதத்தின் போது அமைச்சர் ராஜித சேனாரத்னவும் சபாநாயகரும் தலையிட்டனர்.