இலத்திரனியல் மயப்படுத்துவதன் ஊடாக அரசாங்கத்தின் வருமானம் அதிகரிக்கும்!

Report Print Kalkinn in பாராளுமன்றம்

இலத்திரனியல் வர்த்தகம் மற்றும் இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல்களுக்கு டிஜிட்டல் சட்டமூலம் வலு சேர்க்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல்களை மேம்படுத்துவதன் ஊடாக அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதன்படி, மோட்டார் வாகன சாரதி அனுமதி பத்திரம் வழங்கல், வரி செலுத்துதல் மற்றும் விசா வழங்கும் நடைமுறை ஆகியன இலத்திரனியல் மயப்படுத்தப்படுவதன் ஊடாக அரசாங்கத்தின் வருமானங்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.

இந்த நடைமுறையின் ஊடாக வங்கி சம்பிரதாய கொடுக்கல் வாங்கல் முறையிலும் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரத்ன சுட்டிக்காட்டினார்.