அடிப்படை விடயங்கள் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் இலத்திரனியல் மயப்படுத்தல் சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும்

Report Print Kalkinn in பாராளுமன்றம்

நீதிமன்றத்திற்கான ஆவணங்களை இலத்திரனியல் முறையில் சமர்ப்பிக்கின்றமை ஆராயப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹெந்துன்னெத்தி நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

ஆவணங்களில் காணப்படுகின்ற பிரச்சினைகள் காரணமாகவே இன்றும் அரசியல் கைதிகள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், ஆவணங்கள் காணாமல் போனமையினாலேயே இவ்வாறான பாரிய பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தற்போது காணப்படுகின்ற நிலைமையில், இவ்வாறான இலத்திரனியல் மயப்படுத்தப்படுவதற்கான காரணம் என்னவென அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிராம உத்தியோகத்தர்களுக்கு அலுவலகங்கள் இல்லாத நிலையில், அவருக்கு எவ்வாறு கணினி கட்டமைப்பு வழங்குவது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொலிஸ் நிலையங்களிலுள்ள வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு முடியாதுள்ள நிலையில், இந்த இலத்திரனியல் மயப்படுத்தல் அவசியமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்வாறான குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டதன் பின்னர் இலத்திரனியல் மயப்படுத்தல் முன்னெடுக்கப்படும் பட்சத்தில், அது வரவேற்கத்தக்கது எனவும் சுனில் ஹெந்துன்னெத்தி கூறியுள்ளார்.

இலத்திரனியல் மயப்படுத்தலுக்கான உரிய பொறிமுறையொன்று தயாரிக்கப்பட வேண்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹெந்துன்னெத்தி குறிப்பிட்டுள்ளார்.