சமாளிக்கும் நோக்கில் 2018ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம்: நாடாளுமன்றில் குற்றச்சாட்டு

Report Print Sujitha Sri in பாராளுமன்றம்

அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளையும், சீனா, ஜப்பான், ஆசிய நாடுகளையும் சமாளிக்கும் நோக்கிலேயே 2018ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தொடர்ந்தும் கூறுகையில்,

வெளித்தோற்றத்தில் பார்க்கும் போது இது நல்லிணக்க நோக்கில் தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் போன்று காணப்படினும், ஐ.நா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் நெருக்கடிகளை சமாளிக்கும் நோக்கிலேயே இது அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முன்னைய அரசாங்கத்தினால் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட சீனா சார்புக் கொள்கையை கைவிடாத வகையிலும், அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையிலேயே வரவு செலவுத் திட்டம் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், 2018ஆம் ஆண்டிற்கான இந்த வரவு செலவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தொடங்கிய பின்பு இந்த அரசாங்கம் புதிய வரிகளை கண்டுப்பிடித்து விதிக்கும் ஆபத்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.