முன்னாள் போராளிகள் நாட்டைவிட்டு தப்பி ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது!

Report Print Nivetha in பாராளுமன்றம்

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த போது ஆட்சேர்ப்பில் ஈடுப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு, முன்னாள் போராளிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார்.

இதனால், முன்னாள் போராளிகள் நாட்டை விட்டு தப்பி ஓட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்றைய தினம் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

தற்போது புனர்வாழ்வு பெற்றவர்களின் நிலைதான் என்ன? முன்னாள் போராளிகள் தனது வாழ்வியலை தொடங்கும் நேரம் புலனாய்வு பிரிவினரால் பிடிக்கப்பட்டு இப்படியான சூழலுக்குள் தள்ளப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் போராளிகளுக்காக தேசிய தொழில் பயிற்சி சான்றிதழ்கள் வழங்குவதற்காக 25 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் புனர்வாழ்வு பெற்ற போராளிகள் என்று அடையாளம் காட்டப்படுபவர்கள் இதன் பயனாளிகளாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கை நாடானது 2017 ஜூன் மாதம் வரை 10.06 பில்லியன் டொலர்கள் கடனாளியாக இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார்.