அலோஸியஸுடன் தொடர்பு வைத்திருந்த கோப் குழு உறுப்பினர்கள் தொடர்பில் விசாரிக்க மஹிந்த அணி கோரிக்கை

Report Print Ajith Ajith in பாராளுமன்றம்

பெர்பச்சுவல் ட்ரெசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜுன் அலோசியஸுடன் உரையாடல்களை மேற்கொண்டாக கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோப் குழு அங்கத்துவத்தை இடைநிறுத்த வேண்டும் என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம்(21) நடைபெற்ற வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் கோப் குழுவில் இடம்பெற்ற விசாரணைகளின்போது, அதில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அர்ஜுன் அலோஸியஸுடன் தொடர்பு வைத்திருந்ததாக தகவல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.