2020ஆம் ஆண்டில் 50000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ளப்படுவர்

Report Print Kamel Kamel in பாராளுமன்றம்

எதிர்வரும் 2020ஆம் ஆண்டில் சுமார் 50000 மாணவ, மாணவியர் அரசாங்க பல்கலைக்கழகங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவர் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு தெரிவித்துள்ளார்.

உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சிற்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் இன்று பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2015ஆம் ஆண்டில் அரசாங்க பல்கலைக்கழகங்களில் 25000 மாணவ, மாணவியர் இணைத்துக் கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2015-2016ஆம் ஆண்டில் 30500 மாணவ, மாணவியர் அரசாங்க பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கை 2020ஆம் ஆண்டில் 50000மாக உயர்த்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.