அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் செயற்பாடுகள் சந்தேகத்திற்குரியது: அனுரகுமார திஸாநாயக்க

Report Print Steephen Steephen in பாராளுமன்றம்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்ந்தும் ஒத்திவைக்கப்படுவது மற்றும் அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் செயற்பாடுகள் தொடர்பில் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் அனுரகுமார திஸாநாயக்க நிலையியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் இன்று நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் பைஸர் முஸ்தபா நடந்து கொள்ளும் விதம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

முக்கியமாக வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்கு காரணமாக தேர்தலை நடத்த மீண்டும் தடையேற்பட்டுள்ள சூழலில், அமைச்சர் பைஸர் முஸ்தபா நாடாளுமன்றத்திற்கோ அல்லது மக்களுக்கோ எவ்வித விளக்கங்களையும் முன்வைக்காமல் இருந்து வருகிறார்.

அந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது கூட அமைச்சர் நீதிமன்றத்திலும் ஆஜராகவில்லை.

அமைச்சர் பைஸர் முஸ்தபா வெளிநாடு சென்றுள்ளார் என்பதை ஊடகங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.

இதுவும் சந்தேகத்திற்குரியது. வரவு செலவுத் திட்டம் விவாதிக்கப்படும் போது ஆளும் கட்சியின் பிரதிநிதிகள் எவரும் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ள போதும் அமைச்சர் முஸ்தபா வெளிநாடு சென்றுள்ளார்.

இதனால், அவர் எதற்காக வெளிநாடு சென்றார் என்பதை தெளிவுபடுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.