இலங்கையில் ஏற்படவிருந்த அழிவுகளை குறைத்துக் கொள்ள முடிந்தது

Report Print Sujitha Sri in பாராளுமன்றம்
154Shares

சீரற்ற காலநிலை தொடர்பில் மக்கள் காலநிலை அவதான நிலையத்தால் எச்சரிக்கப்பட்டு வந்ததால் இலங்கையில் ஏற்படவிருந்த அழிவுகளை குறைத்துக் கொள்ள முடிந்ததாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கடந்த புதன்கிழமை ஏற்படவிருந்த சீரற்ற காலநிலை தொடர்பில் காலநிலை அவதான நிலையம் முன்னரே பொதுமக்களை அறிவுறுத்தி வந்தது.

அத்துடன், கடற்றொழிலாளர்களையும், கடற்படையினரையும் அவதானமாக செயற்படுமாறு எச்சரித்திருந்தது. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாட்டில் ஏற்படவிருந்த அழிவுகளை குறைத்துக் கொள்ள முடிந்தது.

அத்துடன், தற்போது வானிலை அவதான நிலையத்திற்கு தேவையான நவீன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.