மக்களின் இதயத் துடிப்பை புரிந்துகொண்டுள்ளோம்: நாடாளுமன்றில் மைத்திரி

Report Print Shalini in பாராளுமன்றம்

தற்போதைய அரசாங்கம் வறிய மக்களின் இதயத் துடிப்பை புரிந்துகொண்டு செயற்படும் அரசாங்கமாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்

வீடமைப்பு நிர்மாணத்துறை, சுகாதாரப் போசணை, சுதேச மருத்துவ துறை அமைச்சின் மீதான மூன்றாவது விவாதத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டு மக்களின் இலவச சுகாதார உரிமையை வெற்றிகொள்வதற்கு தற்போதைய அரசாங்கம் முக்கியமான பணிகளை நிறைவேற்றியுள்ளது.

அப்போதைய காலக்கட்டத்தில் ஓளடத சட்டம் மற்றும் புகையிலைச் சட்டம் கொண்டு வருகின்ற போது சுகாதார அமைச்சர் என்ற வகையில் தான் முகம் கொடுத்த சவால்களை இதன்போது நினைவுகூர்ந்தார்.

சுதேச வைத்திய துறையின் எதிர்கால பயணத்திற்கு அரசாங்கம் பல்வேறு விசேட நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேலும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் வெற்றிகளையும் ஜனாதிபதி பாராட்டினார்.