நாடாளுமன்றில் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்த ஆளும் கட்சி அமைச்சர்!

Report Print Kamel Kamel in பாராளுமன்றம்

பெருந்தோட்ட அமைச்சர் நவீன் திஸாநாயக்க இன்று நாடாளுமன்றில் எதிர்க்கட்சி ஆசனமொன்றில் அமர்ந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றிற்கு வருகை தந்த அமைச்சர் நவீன் திஸாநாயக்க அவரது ஆசனத்தில் சிறிது நேரம் அமர்ந்திருந்தார், பின்னர் வெளியேறிச் சென்று மீண்டும் வந்தார்.

வந்த போது ஐக்கிய தேசியக் கட்சியின் பின் வரிசை உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் எதிர்க்கட்சி ஆசன வரிசையில் அமர்ந்து கொண்டார்.

கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களான சந்தீத் சமரசிங்க, அசோக பிரியந்த, செஹான் விதானகே, சமிந்த விஜேசிறி ஆகியோருடன் நீண்ட நேரம் கலந்துரையாடினார்.

எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்வது வழமையன்று என ஆளும் கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க அமைச்சருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.

எனினும் இதனை பொருட்படுத்தாது அமைச்சர் திஸாநாயக்க தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.

பொதுவாக அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்கள் பின்வரிசையில் அமர்வது வழமைக்கு மாறானது. அவ்வாறு சென்று அமரவும் கூடாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.