மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது! அரசாங்கம் உறுதி

Report Print Murali Murali in பாராளுமன்றம்

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் புதிதாக மின்மானி வாசிப்பாளர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

அத்துடன், மின்கட்டணம் எந்த வகையிலும் அதிகரிக்கப்படமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மின்வலு மற்றும் புதுப்பிக்கக்கூடிய வலுசக்தி, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் ஆகிய அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு பற்றி குழு நிலை விவாதம் நாடாளுமன்றில் இன்று இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போது பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.