எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது உறுதி!

Report Print Murali Murali in பாராளுமன்றம்

இலங்கை - இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையை சுமூகமான பேச்சுவார்த்தையின் மூலம் தீர்ப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அமைச்சர்,

“சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை தொடர்ந்தும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்படுகின்ற படகுகளை அவர்களுக்கு மீள கையளிக்காததால், இந்திய மீனவர்களின் பிரவேசம் 50 சதவீதமாக குறைந்துள்ளது.

இந்நிலையில், இந்திய மீனவர்களுக்கு புதிதாக மீன்பிடி படகுகளை பயன்படுத்துவதற்கான அனுமதிப் பத்திரத்தை வழங்கப்போவதில்லை என இந்திய அரசு தீர்மானித்துள்ளதாக” அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.